இந்தியா முழுவதும் பெரு நகரங்கள் தொடங்கி பல பகுதிகளில் வங்கிகளின் பணம் வழங்கும் ஏடிஎம் மெஷின்கள் செயல்பட்டு வருகின்றன. சில சமயங்களில் சிலர் ஏடிஎம்மை கொள்ளையடிக்கும் சம்பவங்களும், கொள்ளையடிக்க முயலும்போது சிக்கும் சம்பவங்களும் நடப்பது தொடர் கதையாகியுள்ளது.
ஆனால் இப்படிப்பட்ட ஏடிஎம் கொள்ளைகளை எப்படி எளிதாக செய்வது என பீகாரை சேர்ந்த ஆசாமி ஒருவர் கோச்சிங் க்ளாஸே நடத்தியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த சுதிர் மிஷ்ரா என்ற நபர் 15 நிமிடங்களில் ஏடிஎம்-ஐ எளிதாக கொள்ளையடிப்பது எப்படி? என்ற 3 மாத கால கோச்சிங் வகுப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இந்த கோச்சிங் க்ளாஸில் படித்து லக்னோவில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நீரஜ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீரஜை விசாரித்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. மூன்று மாத போஸ் முடிந்த பின் 15 நாட்கள் நேரடி செய்முறை பயிற்சியும் அளித்துள்ளார் சுதிர் மிஷ்ரா. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த செய்தி ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.