இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் இந்த தீ விபத்து குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். இன்று இரவு லோக் கல்யாண் மார்க் என்ற பிரதமர் இல்ல, அலுவலக வளாகத்தில் எலக்ட்ரிக் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த தீ விபத்து பிரதமர் இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் நடக்கவில்லை என்பதும், எஸ்பிஜி ரிசப்ஷன் ஏரியாவில் தான் இந்த தீ விபத்து நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும் தீ விபத்து உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார் இதனை அடுத்து பாஜக தொண்டர்களும் நாட்டு மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது