தியான அனுபவங்களை பகிர்ந்த பிரதமர் மோடி..! பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என அழைப்பு..!!

Senthil Velan

திங்கள், 3 ஜூன் 2024 (14:07 IST)
அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணித்து, பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார். இந்நிலையில், கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்த போது, தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணித்து, பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அரசியல் விவாதங்கள், குற்றச்சாட்டுகள், சவால்கள் என பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளான நிலையில், கன்னியாகுமரியில் தியானத்தில் அமர்ந்ததும் தன்னுள் பற்றின்மை வளரத் தொடங்கியதாகக் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
தமது மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகி வெற்றிடமாக மாறியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் நம் நாட்டின் புனித நதிகள் வெவ்வேறு கடல்களில் கலக்கும் நிலையில், கன்னியாகுமரியில் கடல்களே சங்கமிப்பதாகவும், இது பாரதத்தின் கருத்தியல்களின் சங்கமம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அடுத்த 50 ஆண்டுகளை தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டுமெனக் கூறியதை நினைவு கூர்ந்த பிரதமர், அவர் கூறிய அந்த 50 ஆண்டுகளில் நாடு விடுதலை அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

ALSO READ: வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்.! அனைத்து செயற்பொறியாளர்களுக்கு பறந்த உத்தரவு..!!
 
அதேபோன்று அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிக்க அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, நமது முயற்சிகள் பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்