பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக தற்போது அயோத்தி வந்தடைந்துள்ள பிரதமர் மோடி முதலாவதாக அங்குள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த அனுமன் கர்கி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள அனுமன் சிலைக்கு தானே தீபம் ஏற்றி வழிப்பட்ட பிரதமர் மோடியை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று அவருக்கு பட்டு துணி அணிவித்து மரியாதை செய்தனர். பிறகு கோவிலை சுற்றி வந்த பிரதமர் தற்போது ராமர் கோவில் பூஜைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.