இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி 8 மணிக்கு நடைபெற்றது. ஆனால், இந்த போட்டி நடைபெற கூடாது என்பதற்காக சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடைபெற்றது. போலீஸார் நடத்திய தடியடிக்கு பின்னர் போராட்டகாரர்கள் கலைத்துவிடப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் பாரதிராஜா, வெற்றிமாறன், சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இப்போட்டியின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர், மைதானத்தில் காலணி வீசியும், துணிகளை வீசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் வீசிய செருப்பு ஜடேஜாவின் அருகே விழுந்தது. இதனைக்கண்ட ஜடேஜா செருப்பை ஃபுட்பால் போல் உதைத்து விளையாடினார். பிறகு ஊழியர் ஒருவர் அந்த செருப்பை எடுத்து சென்றார். இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.