கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடியும் நிலையில் நாட்டு மக்களோடு உரையாடி வருகிறார்.
அதில் பேசிய அவர் இன்று அம்பேத்கர் பிறந்த நாளை நினவு கூர்ந்தார். பிறகு பேசிய அவர் “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், இந்திய மக்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்திய மக்கள் ஊரடங்கள் பட்ட துயரங்களை என்னால் உணர முடிந்தது. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதை மேலும் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த 19 நாட்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது” என கூறியுள்ளார்.