மது பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி: கிங் பிஷர் ரூ.2, விஷ்கி ரூ.49...!!

ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (15:03 IST)
மும்பையைச் சேர்ந்த பார் ஒன்றில் மதுபிரியர்களுக்கு மிகக் குறைந்த விலையில் நான்கு நாட்களுக்கு மது விற்க்கப்படுகிறது.

 
மும்பையை சேர்ந்த தனியார் பார் ஒன்று மது பிரியர்களுக்காக அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, கிங் பிஷர் பீர் ரூ.2-க்கும், ஜானி வால்கர் பிளாக் லேபிள் ரூ.49-க்கும் சலுகை விலையில் வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த சலுகையானது டிசம்பர் 4 முதல் டிசம்பர் 8 வரை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதியம் முதல் பார் முடியும் நேரம் மட்டுமே இந்த சலுகையை வழங்கபபடும் என்றும் பார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்