சலுகைகள் வழங்குவதில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ-ஏர், விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்களுக்கு இடையே அதிக போட்டி நிலவுகிறது.
கோ-ஏர் நிறுவனம் ரூ.1,073-க்கு விமான டிக்கெட் வழங்குவதாக அறிவித்துள்ளது. சென்னை-ஹைதராபாத், டெல்லி-சண்டிகர், சண்டிகர்-டெல்லி, ஹைதராபாத்-சென்னை, லக்னோ-டெல்லி, கொல்கத்தா-பாட்னா, கொல்கத்தா-புவனேஸ்வர், லக்னோ-கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு கோ ஏர் ஆஃபர் டிக்கெட்டுகளை வழங்குகின்றன.
மேக் மை ட்ரிப் மற்றும் கிளியர் மை டிரிப் மூலம் டெல்லியிலிருந்து மும்பை செல்வதற்கும் பெங்களூர் செல்வதற்கும் ரூ.2,000 இருந்து ரூ. 3,000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.