அன்பு திருடர்களே ப்ளீஸ் அதை குடுத்துடுங்க! – மாற்று திறனாளி பதிவால் கலங்கிய முதல்வர்!

வியாழன், 28 ஜனவரி 2021 (13:10 IST)
கேரளாவில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மகனுக்கு வாங்கி தந்தை சைக்கிளை திருடர்கள் திருடிய நிலையில் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வருபவர் சுனீஷ். மாற்றுத்திறனாளியான இவர் கைகள் மட்டுமே செயல்படும் நிலையிலும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வீட்டிலிருந்தே பணியாற்றி அந்த ஊதியத்தில் தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுனீஷ் தனது மகன் ஜஸ்டினுக்கு தான் சேமித்த 5 ஆயிரம் ரூபாயை கொண்டு புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.

வீட்டு வாசலில் நின்ற அந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்ட சுனீஷ் தான் மாற்றுத்திறனாளி என்றும், தன் மகனுக்கு பிறந்தநாள் பரிசாக கஷ்டப்பட்டு அந்த சைக்கிளை வாங்கியதாகவும் கூறி அதை எடுத்தவர்கள் திரும்ப அளிக்க வேண்டும் என மன்றாடி கேட்டுள்ளார்.

இது கேரள முதல்வர் பினராயி விஜயன் கவனத்திற்கு சென்ற நிலையில் உடனடியாக சைக்கிளை திருடியவர்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் மூலமாக ஜஸ்டினுக்கு புதிய சைக்கிளும் வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்