பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு: பினராயி விஜயன் அதிரடி!

புதன், 30 மே 2018 (18:10 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் நாளுக்கு நால் அதிகரித்த வண்ணம் உள்ளது. 
 
அதுவும் கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கு பின்னா் பெட்ரோல் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தவாரே உள்ளது. 
 
இந்நிலையில் இன்று 16 நாட்களுக்கு பின்னர் இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்படும் போது மட்டும் ரூபாய் கணக்கிலும், குறைக்கப்படும் போது பைசா கணக்கிலும் ஏற்ற இறக்கம் இருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 
இதையடுத்த மக்களின் துயரை போக்க கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜூன் 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியையும் குறைக்க ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்