விலை உயர்வால் பெட்ரோல், டீசல் கடத்தல்; நேபாள எல்லைக்கு படையெடுக்கும் மக்கள்

செவ்வாய், 29 மே 2018 (16:16 IST)
பெட்ரோல், டீசல் விலை நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

 
                                                                          நன்றி: ANI
இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி விற்கும் நாடுகள் இந்தியாவை விட குறைவான விலையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு, சர்வேத சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறிவருகிறது.
 
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேபாளத்தில் இருந்து எல்லை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் பெட்ரோல் விலை ரூ.65க்கும், டீசல் ரூ.55க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதனால் மக்கள் வாகனங்களை நேபாள எல்லைகளுக்கு எடுத்துச்சென்று பெட்ரோல், டீசல் நிரப்பி வருகின்றனர். மேலும், பெட்ரோல், டீசல் கடத்தல் தடுக்கப்படும் என்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்