ரூ.80ஐ எட்டியது பெட்ரோல் விலை; வரலாறு காணாத உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

வியாழன், 24 மே 2018 (10:52 IST)
தொடர்ந்து விலை அதிகரித்து வரும் பெட்ரோல் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

 
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி வருகின்றனர். தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் கொண்டு வந்த பின்னர் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. 
 
கர்நாடாக சட்டசபை தேர்தலின் போது 4 நாட்கள் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு பலரும் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்படுவதே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய ஒரே காரணத்தை கூறி வருகிறது. 
 
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் விலை ரூ.80ஐ எட்டியது. டீசல் ரூ.72.14க்கும், பெட்ரோல் ரூ.80.11க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்