பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்!
வியாழன், 15 டிசம்பர் 2022 (14:26 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்
ஆனால் பெட்ரோலியத் துறை அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அமைச்சரின் இந்த பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவிதது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்களும் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது