ஆம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்தாலும் இலங்கை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயரவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும், இந்தியா உயர்த்தவில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவர், பிற நாடுகள் பெட்ரோல் விலையை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திய போதும், இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.