பெட்ரோல், டீசல் விலையேறி கொண்டே போவதால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பொருட்களின் விலையும் ஏறி வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை 20 லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வரிசையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, நான் ஒரு அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிக்கப்பில்லை என கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பேசிய அவர் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது எனக் கூறினார்.