அந்த தனியார் மருத்துவமனையில் ஹிமான்ஸா பரத்வாஜ் மூளை சாவு அடைந்ததாகவும்.அவரது இதயம் மட்டும் துடிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இதய துடிப்பும் நின்றுவிட்டதாக கூறி அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபருக்கு இதயம் துடிப்பதும், மூளை செயல்படுவதும் தெரியவந்துள்ளது. மருத்துவர்களிம் தவறான புரிதலால் அந்த நபர் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.