''மக்கள் அச்சம்!'' ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் வைத்திருந்த வகுப்பறை இடிப்பு- ஒடிஷா அரசு

வெள்ளி, 9 ஜூன் 2023 (21:14 IST)
ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  288 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த ரயில் விபத்து இந்தியாவை உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்  அங்குள்ள பாகாநாகா அரசு உயர் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருனந்தன.

பள்ளி வளாகம் பிணவறையாக மாற்றப்பட்டிருந்தது. தற்போது கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில், அந்த அறைக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவ, மாணவிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், பள்ளியில் ஒரு பகுதியை இடித்து, புதிதாக கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், கோடை விடுமுறை முடிவதற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு வருவதாகவும், வரும் ஜூன் 19 ஆம் தேதிக்குள் இந்த  இடத்தில் புதிய வகுப்பறை கட்டித்தரப்படும் என்று ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்