திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்படுமா? – விரைவில் 4ம் கட்ட தளர்வுகள்!

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (08:55 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் நான்காம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்க உள்ள நிலையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 30 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் வரை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள தளர்வுகள் மத்திய அரசால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. மூன்று கட்ட ஊரடங்குகளிலும் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் திறக்க தடை தொடர்ந்து வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கில் திரையரங்குகளை கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல ஊரடங்கினால் பல மாநிலங்களில் பேருந்துகள், ரயில்கள் செயல்படாமல் உள்ள நிலையில் உள்ளூர் மெட்ரோ ரயில் சேவைகள், பேருந்து சேவைகள் தொடங்கவும் தளர்வுகளில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்