எச்சில் துப்பினால் அபராதம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

வியாழன், 26 மே 2016 (11:51 IST)
இந்தியாவில் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற சுகாதாரக்கேடான செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது.


 
 
அரசு அலுவலகங்களோ, பொது இடங்களோ எந்த இடத்தையும் பார்க்காமல் சகட்டுமேனிக்கு எச்சில் துப்பும் நபர்களுக்கு அபராதம் போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
 
மத்திய அரசு அலுவலக வளாகங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
 
அரசு அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது, அதனால் சேரும் கட்டட கழிவுகள் அனைத்தும் குறித்த நேரத்தில் அகற்றப்படாமல் இருந்தால், கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
 
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால், நாட்டின் சுகாதாரம் மேம்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்