நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம், புதுப்பிப்பு, வாகன பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் பள்ளி நிறுவனங்களிலும் கட்டணம் கட்டாயம் உயரும்.
வாகனங்களுக்கான வரி வசூல் மாநில அரசுக்கும், இதர கட்டணங்களின் வசூல் மத்திய அரசிடமும் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் புதுப்பிப்பு, முகவரி மாற்றம், வாகன பதிவு, பயிற்சி பள்ளி தொடங்குதல் மற்றும் புதுப்பித்தல் உட்பட 13 சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் சுமார் 40 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.