உத்திர பிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை அடைக்க 5 மாத குழந்தையை விற்ற பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த காலித், சாயிதா தம்பதியினர் தேநீர் கடை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டனர். கடன் கொடுத்தவர் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்.
இதனால் அவர்களது 5 மாத குழந்தையை ரூ.16 லட்சத்துக்கு விற்று கடனை அடைத்தனர். இச்செய்தி வெளியே தெரிய கூடாது என்பதற்காக குழந்தை காணமல் போய்விட்டது என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். காவல் துறையினர் குழந்தையை கண்டுப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை பெற்றோர்களே விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து காவல் துறையினர் காலித், சாயிதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.