பப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் : சிறுவன் தற்கொலை
புதன், 3 ஏப்ரல் 2019 (17:53 IST)
பப்ஜி விளையாட்டுக்கு சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் தீவிர ரசிகர்களாக உள்ளனர். சமீபத்தில் பப்ஜி கேம் தினமும் 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும் என்று இந்தியாவில் ஒரு வரைமுறை கொண்டுவரப்பட்டது.
இந்த பப்ஜி கேமால் பலர் தவறான முடிவு எடுக்கிறார்கள் என்பதால்தான் நம் இந்திய அரசு அழுத்தம் கொடுத்து இதன் விளையாட்டு நேரத்தை வரைமுறைப்படுத்தியது.
இந்நிலையில் பப்ஜி கேம் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததால் ஐதராபத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த சிறுவன் கல்லக்குரி சம்பசிவா. இவர் தேர்வுக்குத் தன்னைத் தயார் செய்யாமல் எப்போதும் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான்.
கடந்த திங்கள் கிழமை இரவில் பாடங்களைப் படிக்காமல் பப்ஜி கேமை விளையாடிக் கொண்டிருந்தான்.இதற்கு அவனது தாய் திட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சம்பசிவா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.