கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:02 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது 
 
கொரோனாவால் பெற்றோர்கள் இழந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் தற்போது கொரோனாவால் பெற்றோரை இழந்து எந்தவித ஆதரவும் இல்லாத குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலும் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தந்தை அல்லது தாய் வழியில் உறவினர்கள் இருந்தால் அவர்களுக்கு கல்வியில் மட்டும் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் இதேபோல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்