செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு: காரணம் இதுதான்!

வியாழன், 28 ஜூலை 2022 (19:10 IST)
செஸ் விளையாட்டு போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சென்றது என்பதும் நேற்று இந்த ஜோதி சென்னை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீர் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா விளையாட்டை அரசியலுடன் கலந்து ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்