கே.ஜே.யேசுதாஸ், சோவுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிப்பு!

புதன், 25 ஜனவரி 2017 (19:30 IST)
திரைப்பட பாடகரும், இந்திய கர்நாடக இசை கலைஞருமான கே.ஜே.யேசுதாஸ் அவர்களுக்கும், மறைந்த திரைப்பட நடிகர், பத்திரிக்கையாளர் சோ அவர்களுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


 

இவர் கடந்த 50 ஆண்டு கால திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

கே.ஜே.யேசுதாஸ் சிறந்த திரைப் பின்னணிப் பாடல்களுக்காக ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்திய மொழிகளில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மலாய், ரஷ்யா, அரபி, லத்தின், ஆங்கில மொழிகளிலும் பாடியுள்ளார்.

மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். இவருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் மறைந்த மூத்தப் பத்திரிக்கையாளரும், திரைப்பட நடிகருமான சோ.ராமசாமி அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்