ரூ.20 துணிப்பைக்கு ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு

திங்கள், 23 அக்டோபர் 2023 (20:25 IST)
கர்நாடகம் மாநிலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான ஷோரூமில் துணிப்பைக்கு ரூ.20 வசூலித்ததை எதிர்த்து நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமாக  IKEA ஷோரூமில் துணிப்பைக்கு ரூ.20 வசூலித்ததை எதிர்த்து  நுகர்வோர் தீர்ப்பாயத்தில் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், ரூ.20 வழங்கப்பட்ட பையில் அந்த நிறுவனத்தின் பெயர் இருந்துள்ளது. இது வணிகச் சட்டத்தின்படி தவறு என்று தீர்ப்பாயம் கூறியதுடன் இதற்கு இழப்பீடாக அப்பெண்ணுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்