நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்தரயான் 2, கடந்த 7 ஆம் தேதி நிலவின் மேற்பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயற்சித்த போது நிலவின் 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
நிலவில் 14 நாள் பகல் காலமும், 14 நாள் இரவு காலமுமாக இருக்கும். நிலவு காலம் வந்துவிட்டால் குளிர் நிலவும். ஆதலால் லேண்டரின் மின்னணு பாகங்கள் செயலிலந்துவிடும். எனவே விக்ரம் லேண்டரின் 14 நாட்கள் ஆயுட்காலம் முடிந்துள்ள நிலையில் தொடர்ப்பு ஏற்படுத்த முடியதாக காரணத்தால் அடுத்து என்ன என அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ நகர்ந்துள்ளது.
ஆம், இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். இந்த தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலையில், ஆர்ப்பிட்டர் சிறப்பாக செயல்பாட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.