இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலைவின் மேற்பகுதியில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. அதன் பின்னர், எந்த சேதமும் இன்றி சாய்ந்த நிலையில் லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பகுதியில் உள்ளதாக ஆர்பிட்டர் தகவல் கொடுத்தது.
இந்நிலையில் அதை தொடர்ந்து தகவல் தொடர்ப்பை மீண்டும் பெற பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனலிக்கவில்லை. எனவே இஸ்ரோ, விக்ரம் லேண்டரை படம் பிடிக்க, தொடர்புகொள்ள நாசாவின் உதவியை நாடியிருந்தது. நாசாவும் உதவ முன்வந்தது.