27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ‘மிஸ் வேர்ல்டு' போட்டி: ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

வெள்ளி, 9 ஜூன் 2023 (08:43 IST)
இந்தியாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் நடைபெற்ற நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவர் ஜூலியா நேற்று டெல்லியில் இந்த தகவலை தெரிவித்தார். இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் மிஸ் வேர்ல்ட் 2023 உலக அழகி போட்டி நடைபெறும் என்றும் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் இதில் பங்கேற்க உள்ளனர் என்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த போட்டி அமையும் என்றும் தெரிவித்தார்.
 
கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற கரோலினா இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் அவர் பேசியபோது ’இந்தியாவுக்கு வரும்போது வேறு நாட்டுக்கு செல்வது போன்ற உணர்வு ஏற்படுவதில்லை, எனது சொந்த நாடாகவே கருதுகிறேன். இந்திய குடும்பங்களின் பாரம்பரியம், இந்தியர்களின் மரியாதை, விருந்தோம்பல் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்தியாவில் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்
 
ரீட்டா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹெய்டன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் ஆகிய 6 இந்திய பெண்கள் இதுவரை மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ள நிலையில் இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டத்தை இந்திய அழகி வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்