ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்..!

சனி, 16 டிசம்பர் 2023 (07:34 IST)
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்தி பேட்டை என்ற பகுதியில் ஆயுதப்படை காவலராக நரேன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில் மொத்த சம்பளத்தையும் அதில் இழந்து உள்ளார்.

 மேலும் விட்டதை பிடிக்கலாம் என்ற ஆவலில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியும் சூதாடியுள்ளார். இந்த நிலையில் கடன்காரர்கள் நெருங்கியதை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் கண்டிப்பு குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலை ஆகியவை அவரை தற்கொலைக்கு தூண்டியது.

இதனை அடுத்து அவர் இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்