ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:03 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் வெகு ஜோராக நடந்து கொண்டு இருப்பதால் இதற்கு அடிமையாகிய பலர் தங்களுடைய லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட துர்பாக்கிய சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றமும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிரடியாக ஆந்திராவில் ஆன்லைன் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை தண்டனை என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதேபோல் இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்