ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்ய பாமக கோரிக்கை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?

வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:16 IST)
ஆன்லைன் வகுப்புகள் முரண்பட்ட முறையில் நடத்தப்படுவதால் கடுமையான எதிர்ப்புகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள பாமகவுன் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
 
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூறும்போது ஆன்லைன் கல்வி முறை மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது என்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தினமும் 2 மணி நேரம் மட்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்றும் மற்ற மாணவர்களுக்கு  ஆன்லைன் உணவுகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சியே ஆன்லைன் உறுப்புகளுக்கு தெரிவித்துள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் தடை குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்யலாம் என்று கூறப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்