ஒரே மாதத்தில் அசூர வேக பரவல் - ஒமிக்ரான் பீதி!

வியாழன், 23 டிசம்பர் 2021 (09:23 IST)
ஒமிக்ரான் வைரஸ் ஒரே மாதத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
 
கடந்த மாதம் 24 ஆம் தேதி  முதன் முதலாக கண்டறியப்பட்டது இந்த ஒமிக்ரான் வைரஸ். ஆனால் இப்போது இது ஒரே மாதத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் டெல்டாவை விட பன்மடங்கு வேகமாக பரவி வருவதால் துவக்கம் முதலே எச்சரிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் உலக அளவில் ஓமிக்ரான்  நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் டென்மார்க்கில் அதிக எண்ணிக்கையிலான ஓமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்தில் 60,508 பேருக்கும், டென்மார்க்கில் 26,362 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்