ஹைதராபாத்தில் சாமி தரிசனம் செய்த சிந்து

சனி, 27 ஆகஸ்ட் 2016 (10:44 IST)
நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


 

 
ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த அவருக்கு பிரதமர் மோடி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு வீடு, கார், அரசு வேலை மற்றும் கோடிக்கணக்கில் பணமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஹாதராபாத் திரும்பிய அவருக்கு தாரை தப்பட்டையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் ஒரு மைதானத்தில் அவருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அதில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு சிந்துவை பாராட்டினார்.
 
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சிம்மவாஹினி  கோவிலில் அவர் வழிபாடு செய்தார். புடவை அணிந்து, தலையில் தட்டை தூக்கிக் கொண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தார் சிந்து. தான் பெற்ற வெள்ளிப்பதக்கத்தை அவர் சாமி முன்பு வைத்து வழிபட்டார். அவருக்காக, கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்