600 ரூபாயில் எப்படி வாழ்வது – முதல்வரை மிரட்டிய மூதாட்டி !

திங்கள், 3 ஜூன் 2019 (17:00 IST)
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனிடம் மூதாட்டி ஒருவர் உரிமையோடு பேசும் புகைப்படம் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரளாவில் நேற்று முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரில்  நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் பிணராயி விஜயன் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்திருந்த முதிய மூதாட்டி ஒருவர் உரிமையோடு மேடைக்கு வந்து சண்டைப் போட்டார். அதைக் கண்ட அனைவரும் அந்த மூதாட்டியிடம் சமாதானம் பேச முயன்றுள்ளனர்.

அப்போது அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாத மூதாட்டி அலியும்மா என்ற முஸ்லிம் மூதாட்டி முதல்வர் பிணராய் விஜயனுக்கு நேராக விரல் சூண்டியபடி  " மாதம் தோறும் அரசு தரும் 600 ரூபாய் பென்சன் தொகை எனக்கு போதாது. 600 ரூபாயில் குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளதால் உயரத்தி வழங்க வேண்டும் ’எனக் கேட்டார்.

அப்போது சுற்றியிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்ய அலியும்மா கோபமாக ’நான் எனது மகனிடம் கோரிக்கை வைக்கிறேன்..நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்’ என்று பதிலளித்து விட்டு மேடையை விட்டு இறங்கி செல்வதை பார்த்து முதல்வர் பிணராய் விஜயன் சிரித்தபடி அமர்ந்திருந்தார். முதல்வரிடம் தைரியமாக மூதாட்டி ஒருவர் பேசிய சம்பவம் கேரளாவில் வைரல் ஆகியுள்ளது
குளச்சல் அஸீம் அவர்களின் பதிவில் இருந்து.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்