இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறைச்சாலை கைதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பல மாநில அரசுகளும் சிறை கைதிகளை பரோலில் அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு பயந்து சிறையை விட்டு செல்ல கைதிகள் மறுக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கிளை சிறைச்சாலையில் பலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ள 113 கைதிகளுக்கு கொரோனா சோதனை நடத்தியதில் 70 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 5 சிறை காவலர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அந்த 75 பேரும் சிறைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.