சிவன் கோவில்களில் கஞ்சாவுக்கு தடை விதிக்க ஒடிஷா அரசு முடிவு

புதன், 24 மே 2023 (18:08 IST)
ஒடிஷா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர்,  சிவன் கோவில்களில் கஞ்சாவுக்கு தடை விதிக்க நடவடிக்கை வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.

ஒடிஷா மாநிலத்தில் நவீன் பட் நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆரடி அருகேயுள்ள பாபா அகண்டல்மணி சிவன் கோவிலில் கஞ்சா பயன்பாடில் உள்ளதால்,  மதம் உணர்வு மாசுபடுகிறது. இதற்குத் தடைவிதிக்க வேண்டும், கஞ்சாவிற்குப் பதில்  நல்லபொருட்களை கடவுளுக்குப் பயன்படுத்தலாம்’’ என்று  அனந்த பலியா அறக்கட்டளையில் தலைவர் பலியா பாபா  கடந்த 13 ஆம் தேதி ஓடிசா மாநில அரசிற்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, அவரது கடிதம் ஒடிஷா மாநில கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில்  ஒடிஷா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர், அந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் நிலைய கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிவன் கோவில்களில் கஞ்சாவுக்கு தடை விதிக்க நடவடிக்கை வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.

அம்மா நிலத்தில்,சிவன் கோவிலகளில் கஞ்சா பயன்பாட்டிற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு தரப்பினர்  இதற்கு எதிர்ப்பு கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்