ஓஎம்ஆர் தாளில் குழப்பம் உண்மையா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

புதன், 21 அக்டோபர் 2020 (07:59 IST)
ஓஎம்ஆர் தாளில் குழப்பம் உண்மையா?
சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது
 
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஓஎம்ஆர் தாள்களில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு ஜீரோ மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், யார் மருத்துவராக வேண்டும் என்பதை யாரோ ஒருவர் முடிவு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டன
 
இந்த நிலையில் இதுகுறித்து தேசிய தேர்வு முகமை விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நீட் தேர்வு முடிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் உண்மையான குறைகள் இருந்து அதை சுட்டிக் காட்டினால் கண்டிப்பாக அதற்கு தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
மேலும் தேர்வு முடிவுகள் மாற்றித் தருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தவறானவை என்றும் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கும் ஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை என்றும், போலியான தகவல்களை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறான செய்தி அளிக்கும் நபர்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
 
சமூக வலைதளங்களில் வெளியாகும் தவறான ஓஎம்ஆர் தாள்களின் அடிப்படையில் ஒரு சில அரசியல்வாதிகள் ட்விட்டர் தளத்தில் காரசாரமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்