தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் வடமேற்கு மும்பை தொகுதியில் ஒரு வேட்பாளர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை நடத்தப்படுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த தேர்தலில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து மீண்டும் எண்ணிக்கை நடத்த சிவசேனா உத்தவ்தேவ் பிரிவினர் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் நடந்துள்ளதால் எத்தனை முறை எண்ணினாலும் அதே எண்ணிக்கை தான் வரும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.