வார இறுதி ஊரடங்கை திரும்ப பெற்றது டெல்லி அரசு

வியாழன், 27 ஜனவரி 2022 (18:34 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வார இறுதி நாட்களில் டெல்லி அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த  நிலையில் தற்போது அந்த ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தலைநகர் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு திரும்பப் பெறுவது என துணைநிலை ஆளுநர் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டெல்லியில் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும் உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல் படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்துள்ளதை அடுத்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்