வரும் மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி: மத்திய அமைச்சர் தகவல்

Mahendran

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (14:03 IST)
வரும் மக்களவை தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதி என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். 
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகிய இருவரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் போட்டியிட இருப்பதாகவும் இருவரும் கர்நாடகாவில் அல்லது வேறு மாநிலத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். 
 
கடந்த 2008ல் பாஜகவில் இணைந்த நிர்மலா சீதாராமன், 2014 வரை கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் அதன் பின்னர், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன், 2016ஆம் ஆண்டு  கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2017 முதல் 2019 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராகவும்,  நிர்மலா சீதாராமன் பதவி வகித்தார். 
 
அதேபோல் தூதரகப் பணியில் இருந்த எஸ். ஜெய்சங்கர், 2015ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பேற்று அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு  வெளியுறவுத்துறை அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்