உங்க அவசரத்துக்கு கூட்டணி அமைக்க முடியாது.. வதந்திகளை நம்பாதீர்கள்: அன்புமணி

Siva

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (06:22 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாமக எந்த கூட்டணியில் இணையும் என்பது தெரியாத நிலையில் உங்கள் அவசரத்திற்கு கூட்டணி அமைக்க முடியாது நாங்கள் ஆழ்ந்து யோசித்து தான் கூட்டணி அமைக்க முடியும் என அன்புமணி பதிலளித்துள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக அல்லது பாஜகவுடன் தான் கூட்டணி என்ற நிலை மட்டுமே பாமகவுக்கு உள்ளது.

இது நிலையில் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுடன் பாமக நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அனேகமாக பாஜக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு இருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதையடுத்து நேற்று இது குறித்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ் ’பாமக இதுவரை எந்த அணியிலும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் நிர்வாகிகள் மட்டத்தில் மட்டுமே ஆலோசனை நடந்து வருகிறது என்று இன்னும் சில நாட்கள் பொறுத்து இருந்தால் பாமக எந்த கூட்டணியில் இணையும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் அதுவரை தயவு செய்து ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் அவசரத்துக்கு எங்களால் கூட்டணி அமைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்