நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது!

வெள்ளி, 20 மார்ச் 2020 (05:57 IST)
நிர்பயா தாயாரின் 7 வருட சட்டப்போராட்டம்
நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளான அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டது. 
 
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க முக்கிய காரணம் நிர்பயாவின் அம்மா ஆஷா தேவி என்பவர் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. 
 
இந்த வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து  7 வருடங்கள் மிக தீவிரமாக ஆஷா தேவி சட்ட போராட்டம் நடத்தி கடைசியில் இன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தன் செல்ல மகளை பலி கொடுத்த கையோடு புலம்பி கொண்டு மூலையில் இருக்காமல் ஆஷா தேவி தீவிரமான சட்ட போராட்டங்களை முன்னெடுத்தார். இந்த வழக்கு விசாரணையின் போதும் ஆஷா தேவி நீதிமன்றத்தில் ஆவேசமாக பேசினார்
 
மரணத்திற்கு முன் நிர்பயா கொடுத்த வாக்குமூலம் முதல் கடைசி நேரத்தில் நிர்பயா பட்ட கஷ்டங்கள் வரை அனைத்தையும் நீதிமன்றத்தில் ஆஷா தேவி பேசியதே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க ஒரு முக்கிய காரணம். இன்று நிர்பயாவின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் என்றே ஆஷாதேவி உறுதியாக நம்பியிருப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்