நாளை தூக்கு உறுதி: நிர்பயா கொலையாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி

வியாழன், 19 மார்ச் 2020 (16:14 IST)
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என நீதிமன்றம் கடந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு அளித்தது
 
ஆனால் இந்த தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் குற்றவாளிகள் நால்வரும் மாறி மாறி மனுக்களை தாக்கல் செய்து வந்ததால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது 
 
இந்த நிலையில் கடைசியாக மார்ச் 20ஆம் தேதி 4 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக குற்றவாளிகள் தரப்பில் இருந்தும், குற்றவாளிகளின் உறவினர்கள் தரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படும் என்ற நிலை இருந்தது
 
இந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் சற்றுமுன் அளித்த தீர்ப்பில் நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட எந்தவித தடையுமில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் டெல்லி திகார் சிறையில் நாளை காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்