மீண்டும் தள்ளிப்போகும் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை!

புதன், 29 ஜனவரி 2020 (18:50 IST)
தூக்கு தண்டனையை எதிர்த்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அடுத்தடுத்து மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து வருவதால் தூக்கு தண்டனையை மீண்டும் தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது 
 
டெல்லி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள நான்கு பேர்களும் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி போடுவதற்கான கடைசி சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகின்றனர் . கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்த நிலையில் மற்றொரு குற்றவாளியான அக்சய்சிங் சார்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த மனு இந்த வார இறுதியில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. ஒரு மனு மீதான நீதிமன்றத்தின் முடிவுக்கு பின் 14 நாட்கள் கழித்தே மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே சட்டவிதி. எனவே ஏற்கெனவே திட்டமிட்டபடி பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஜனவரி 22ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்ட சிக்கல் காரணமாக பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டது ஆனால் இந்த முறையும் சட்ட சிக்கலால் நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது கேள்விக்குறியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்