அபராதம் கட்டக்கூட பணமில்லை: நீதிமன்றத்தில் நிரவ் மோடி தகவல்..!

ஞாயிறு, 12 மார்ச் 2023 (12:54 IST)
அபராத தொகையை கூட செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று லண்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் நீரவ்மோடி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய வங்கிகளில் மோசடி செய்து லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் நீரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து பிரிட்டன் அரசு அதற்கு ஒப்புக்கொண்டது. 
 
ஆனால் தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்தார், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த போது உச்சநீதிமன்றம் அவருக்கு ரூபாய் 1.46 கோடி அபராதம் விதித்தது.
 
இந்த நிலையில் தன்னிடம் அபராதம் செலுத்த கூட பணம் இல்லை என்றும் இந்திய அரசு தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் முடக்கிவிட்டது என்றும் நீரவ் மோடி கூறியதை அடுத்து அபராத தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்