கட்டுக்குள் வந்தது நிபா வைரஸ் பரவல்.. கட்டுப்பாடுகளை தளர்த்திய கேரள அரசு..!

திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:43 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வந்த நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இருவர் பலியான நிலையில் ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பொது இடங்களில் மாஸ்க் அணிவது, பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது என நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக புதிதாக நிபா வைரஸ் தொற்று யாருக்கும் பரவாத நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்