2024ஆம் ஆண்டின் நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. ஜேஇஇ தேர்வு தேதியும் அறிவிப்ப்..

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:15 IST)
அடுத்த கல்வியாண்டு அதாவது 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை சற்றுமுன் தெரிவித்துள்ளது.  
 
அடுத்த கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு 2024 ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் ஜேஇஇ முதல் தேர்வு 2024 ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும். ஜேஇஇ  இரண்டாம் தேர்வு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல் கியூட் இளநிலை படிப்புகளுக்கான நுழைவு தேர்வு 2024 ஆம் ஆண்டு மே 15 முதல் மே 31 வரை நடைபெறும் 
 
முதுநிலை படிப்புகளாக தேர்வு 2024 மார்ச் 11 முதல் மார்க் 28 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்