சென்னை நீர்பகுதியில் மூழ்க வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (21:15 IST)
சென்னையை ஒட்டியுள்ள வங்கக்கடலின் நீர்மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செமீ அளவுக்கு உயரும்  அபாயமுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில்  ஒன்று சென்னை. உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களின் அலுவலகத்தை இங்கு அமைப்பது மட்டுமின்றி, எதாவது ஒரு பொருளை  அறிமுகம் செய்யவும் அதன் விற்ப்னைத் தரத்தை அறியவும் சென்னையை எப்போதும் பெரிதாக மதிப்பர்.

அத்துடன்  நில, நீர், வான் வழி என அத்துணை போக்குவரத்து வசதிகளும் இருப்பதும் இந்த நகரில் வந்து அனைத்துத் துறையினரும் வசிக்கக் காரணம்.

இந்த நிலையில்,  பூவுலகின் நண்பர் இயக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடல் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செமீ உயரும் என்பதால், கடற்கரை பகுதிகள் நீருக்குள் மூழ்கிவிடும் என்றும், அடுத்த 100 ஆண்டுகளில், பேருந்து நிறுத்தங்கள்,புதிதாக அமைக்கப்படும் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள், புற நகர் மின்சார  ரயில் நிலையங்கள் கடலில் மூழ்கும் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது சென்னை வாசிகளுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்