கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு அக். 1 முதல் புதிய நடைமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:36 IST)
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது 
 
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விவரங்களை பாதுகாக்கும் வகையில் டோக்கனைசேஷன் என்ற முறை கட்டாயமாக்கப்படும் என்று  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
 
ஏற்கனவே டோக்கனைசேஷன் முறை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்ட நிலையில் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்த அவகாசம் கேட்டதால் தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு டோக்கனைசேஷன் முறை கொண்டு வரப்பட்டால் ஒரு அட்டையின் சிவிவி எண் போன்ற விவரங்களை அறியும் முறைக்கு மாற்றாக அந்த அட்டைக்கு என டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் எண் என்பது அந்த அட்டையின் விவரங்கள் மற்றும் டோக்கனைசேஷன் கோரிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் விவரங்களின் ஒரு கூட்டு தொகுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்